பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் 'ஆவாஸ் பிளஸ்' திட்டம்: 148 வீடுகளுக்கு அனுமதி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் மத்திய அரசின் 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், கான்கிரீட் வீடு கேட்டு பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், 148 வீடுகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு வழங்க மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது.அதில் 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில் கிராமங்களில் குடிசை வீடுகள் மற்றும்
 மத்திய அரசின் 'ஆவாஸ் பிளஸ்' திட்டம்: 148 வீடுகளுக்கு அனுமதி

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் மத்திய அரசின் 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், கான்கிரீட் வீடு கேட்டு பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், 148 வீடுகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு வழங்க மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது.அதில் 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில் கிராமங்களில் குடிசை வீடுகள் மற்றும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, அரசு பங்களிப்புடன் சொந்த செலவிலும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, பயனாளிகளை ஊராட்சி ஒன்றியம் வாயிலாக தேர்வு செய்து கட்டுமானப்பணிகளை மேற்கொள்கின்றனர்.அவ்வகையில், உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், எஸ்.இ.சி.எல்., டாடா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.தற்போது, உடுமலை ஒன்றியத்தில், 2018--2019ம் ஆண்டில், வீடுகட்ட பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், 148 வீடுகள் கட்டுமானத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டும் வருகின்றன.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'பட்டியலை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்படும். அதன்படி, ஒரு நபருக்கு, 1.70 லட்சம் ரூபாய், நான்கு தவணைகளாக வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X