சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
நிவாரணம் வழங்கல் திண்டுக்கல்: பழநி புறநகர் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சம்பந்தம். இவர் 2021 தேர்தலின் போது நத்தம் தொகுதி கோசுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுச்சாவடியில் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். இவரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தால் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டது. இதன்படி ரூ.15 லட்சம் காசோலையை கலெக்டர் விசாகன், இறந்த கண்காணிப்பாளரின்

நிவாரணம் வழங்கல்
திண்டுக்கல்: பழநி புறநகர் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சம்பந்தம். இவர் 2021 தேர்தலின் போது நத்தம் தொகுதி கோசுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுச்சாவடியில் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். இவரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தால் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டது. இதன்படி ரூ.15 லட்சம் காசோலையை கலெக்டர் விசாகன், இறந்த கண்காணிப்பாளரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.

ஆலோசனை கூட்டம்
குஜிலியம்பாறை: உழவர் நலத்துறை மற்றும் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் அலெக்சாண்டர், காய்கறி செடி பந்தல் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் குறித்து விளக்கினார். வேளாண் பொறியியல் துறை சார்பில் அலுவலர் முருகேசன், விவசாய திட்டங்கள் குறித்து விளக்கினார். துணை அலுவலர் மதியழகன், மேலாளர்கள் அருண்குமார், உதயகுமார் பங்கேற்றனர்.
ஒருவர் பலி
நெய்க்காரப்பட்டி: பழநி அருகே கருப்பண கவுண்டன் வலசில் வசிக்கும் நாட்டுத் துரை மகன் சதீஷ்குமார் 19, பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதி காயம் அடைந்தார். கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் திருடிய மூவர் கைது
கன்னிவாடி: கன்னிவாடி போலீசார் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் ரோந்து சென்றனர். தர்மத்துப்பட்டி கோம்பை நீர்த்தேக்கம் அருகே சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். இதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் 28, சிவபெருமாள் 24, வக்கம்பட்டி ராயப்பன் 51, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
செயற்குழு கூட்டம்
வேடசந்துார்: பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. தலைவர் பாபுலால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும், பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்கவேண்டும், முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், கொரோனா பாதிப்பில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணநிதி வழங்கவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
உணவுத்துறை ஆய்வு
வத்தலக்குண்டு:- பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர். அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகள், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.5000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதித்தனர். உணவுப் பொருட்களுக்கு உரிமம் பெற வேண்டும் என கடைக்காரர்களிடம் வலியுறுத்தினர். இந்த நடவடிக்கையால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கார்
வேடசந்துார்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நுாருல்அமீன் 29. நேற்று மாலை கரூர் பள்ளபட்டியில் ஆடு வாங்க காரில் சென்றார். திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் தம்மனம்பட்டி பிரிவு அருகே, நிலை தடுமாறிய கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த நுாருல்அமீன் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X