பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். கள்ளிமந்தையம் மற்றும் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலம் பாதை பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., ஆனந்தி, தாசில்தார்

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

கள்ளிமந்தையம் மற்றும் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலம் பாதை பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., ஆனந்தி, தாசில்தார் முத்துச்சாமி, நகராட்சி கமிஷனர் தேவிகா, ஒன்றிய தலைவர் அய்யம்மாள் மற்றும் தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, விழுதுகள் அமைப்பு சார்பில் குப்புசாமி, வஞ்சிமுத்து, குழந்தைவேல், ராமர் பங்கேற்றனர்.

ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.6.27 கோடி மதிப்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 880 மரக்கன்றுகள், வெற்றி அமைப்பு (வனத்துக்குள் திருப்பூர்) சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள், விழுதுகள் அமைப்பு சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள், 25 ஆயிரம் பனை விதைகள் மற்றும் பல தன்னார்வக் குழுக்கள் மூலம் மொத்தம் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X