உதவித்தொகைக்கு சான்று அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகைக்கு சான்று அவசியம்

Added : ஜூலை 21, 2021
Share
திண்டுக்கல் : மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்படுகிறது. பயனாளிகள் வி.ஏ.ஓ., மற்றும் அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலரிடம் பயனாளி நலமுடன் உள்ளார் எனச் சான்று பெற்று, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, வங்கி

திண்டுக்கல் : மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்படுகிறது.

பயனாளிகள் வி.ஏ.ஓ., மற்றும் அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலரிடம் பயனாளி நலமுடன் உள்ளார் எனச் சான்று பெற்று, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூலை 30 க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 0451-2460099 ல் பேசலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X