சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடாவடி வசூலில் சிறு கடன் நிறுவனங்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி : நிலக்கோட்டை தாலுகாவில் கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி தரக்குறைவாக நடந்து கொள்ளும் சிறு நிதிநிறுவனங்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் சிறு நிதி நிறுவனங்கள் பெண்கள் உட்பட பலருக்கும் கடன் கொடுத்து உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு பறிபோனது.குடும்பப்

பட்டிவீரன்பட்டி : நிலக்கோட்டை தாலுகாவில் கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி தரக்குறைவாக நடந்து கொள்ளும் சிறு நிதிநிறுவனங்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் சிறு நிதி நிறுவனங்கள் பெண்கள் உட்பட பலருக்கும் கடன் கொடுத்து உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு பறிபோனது.குடும்பப் பொருளாதாரம் சரிவானதால் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை கிராமத்தினர் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். முதல் அலையில் கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, இரண்டாம் அலையின் போது கண்டுகொள்ளவில்லை. இதனால் நிதி நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கடன்தாரர்கள் வீடுகளின் முன்பு அசிங்கமாக பேசி தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் மீது வத்தலக்குண்டு, நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X