பொது செய்தி

தமிழ்நாடு

4542 பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : மாவட்டத்தில் இதுவரை 4,542 கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4.87 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.இதில் 4.6 லட்சம் பேர் முதல் டோஸூம், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாவது டோஸ்

திண்டுக்கல் : மாவட்டத்தில் இதுவரை 4,542 கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4.87 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.இதில் 4.6 லட்சம் பேர் முதல் டோஸூம், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி திரள்வதால், அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில் ஜூலை முதல் வாரத்திலிருந்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 2467 பேர், பழநியில் 770 பேர் முதல் டோஸூம், 33 பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். கர்ப்பிணிகளை பொறுத்தவரை திண்டுக்கல்லில் 746 பேர், பழநியில் 559 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X