ஆத்துார் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.2.5 கோடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துார் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.2.5 கோடி

Added : ஜூலை 21, 2021
Share
செம்பட்டி : ஆத்தூர் தோட்டக்கலைத்துறை சார்பில் மா, முருங்கை, நெல்லி ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில்100 விவசாயிகளை இலக்கு நிர்ணயித்து உள்ளனர். உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:ஆத்தூர் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழப்பயிர்களுக்கு மானியமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம்

செம்பட்டி : ஆத்தூர் தோட்டக்கலைத்துறை சார்பில் மா, முருங்கை, நெல்லி ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில்100 விவசாயிகளை இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:ஆத்தூர் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழப்பயிர்களுக்கு மானியமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் கிடைக்கும்.பம்ப்செட், பைப்-லைன் பணிகள், நீர் தொட்டி அமைக்க மானியம் உண்டு.காய்கறி நாற்றுகள், திசுவாழை, பப்பாளி, பசுமைக்குடில், முருங்கை நாற்று, வெங்காய விதை, இயற்கை பண்ணையம், புதியரக பிரபல படுத்துதலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையத்திற்காக 100 விவசாயிகளுக்கு மா, பல்லாண்டு முருங்கை, நெல்லி போன்ற பயிர்களில் பண்ணையம் அமைக்கப்பட உள்ளது. விரும்பும் விவசாயிகள் ஆத்தூர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X