பொது செய்தி

தமிழ்நாடு

மும்முரம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் கொடைரோடு கமலாபுரம் -- ஒட்டன்சத்திரம் இடையே 36 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கொடைரோடு கமலாபுரம் - ஒட்டன்சத்திரம் வரை 36 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு ரூ.745 கோடி

திண்டுக்கல் : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் கொடைரோடு கமலாபுரம் -- ஒட்டன்சத்திரம் இடையே 36 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கொடைரோடு கமலாபுரம் - ஒட்டன்சத்திரம் வரை 36 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு ரூ.745 கோடி ஒதுக்கியது. இதற்கான பணிகள் கடந்தாண்டு துவங்கி கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது.

பயண நேரம் குறையும்இத்திட்டத்தால் மதுரையில் இருந்து பழநி, கோவை, திருப்பூர் செல்ல விரும்புவோர் திண்டுக்கல் வராமலேயே ஒட்டன்சத்திரம் சென்று, அங்கிருந்து மேற்கண்ட ஊர்களுக்கு மின்னல் வேகத்தில் செல்லலாம். வழக்கமாக மதுரை - ஒட்டன்சத்திரம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். இத்திட்டத்தால் தற்போதைய பயண நேரத்தில் 30 நிமிடங்கள் குறையும். நான்கு வழிச்சாலை அமைக்கும் பகுதிகளில் செம்பட்டி, கன்னிவாடி, தெத்துப்பட்டி, நீலமலைக் கோட்டையில் சிறிய மேம்பாலங்களும் அமைக்கப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X