பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள், பெண்களுக்கு எதிரானபுகாருக்கு உடனடி நடவடிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புகார்கள் மற்றும் தகவல்களை அளிக்க எந்த நேரத்திலும் அணுகலாம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.எஸ்.பி., லாவண்யா தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி., யாக லாவண்யா பொறுப்பேற்றார். அவர் கூறியதாவது:குழந்தைகள், பெண்களுக்கு எதிரான

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புகார்கள் மற்றும் தகவல்களை அளிக்க எந்த நேரத்திலும் அணுகலாம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.எஸ்.பி., லாவண்யா தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி., யாக லாவண்யா பொறுப்பேற்றார். அவர் கூறியதாவது:குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை புகார்களுக்கு எந்நேரமும் அணுகலாம். குழந்தை திருமணம், வன்முறைகள் குறித்த தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் காக்கப்படும்.என்.ஜி.ஓ.,க்கள், குழந்தைகள் அமைப்பினரோடு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறும்படம், ஓவியங்கள், நாடகங்கள், காவலன் செயலி, சமூக வலைத்தளம் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மீதான புகார்கள் வந்தால் உடனே கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து 1098 என்ற எண்ணிலும், 94864 37104 லும் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X