சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி புகார்களுக்கு தனிப்படை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகளை அமைத்து எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமல்படுத்திய கொரோனா முழு ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.இதனால் சாமானிய மக்களில் பலர் வறுமையால் வட்டிக்கு பணம் பெற்று அதை திருப்பி செலுத்த

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகளை அமைத்து எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமல்படுத்திய கொரோனா முழு ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.இதனால் சாமானிய மக்களில் பலர் வறுமையால் வட்டிக்கு பணம் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர் கந்து வட்டிகாரர்களிடம் சிக்கி உடைமைகளை இழக்கின்றனர். சிலர் தைரியமாக போலீசில் புகார் அளிக்கின்றனர்.இவ்வகையில் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கந்து வட்டி தொடர்பாக அதிகளவில் புகார் வருகின்றன. அந்த புகார்கள் மீது தனிகவனம் செலுத்த, கோட்ட அளவில் தனிப்படை அமைக்கும்படி எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார்.

எனவே, திண்டுக்கல் நகர், புறநகர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி உள்பட 7 கோட்டங்களிலும் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படையினர் கந்து வட்டி வசூலிப்போர் குறித்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X