பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவித்த சம்பளம் கிடைக்குமா? விரக்தியில் தேயிலை தொழிலாளர்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வால்பாறை;தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்குகடந்த ஆட்சியில் அறிவித்த சம்பள உயர்வு கிடைக்காததால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நிலகிரி ஆகிய இடங்களில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ) உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக, 335.26 ரூபாய் வழங்கப்படுகிறது.இதே போல், வால்பாறை, நீலகிரி, ஹைவோயிஸ்,

வால்பாறை;தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்குகடந்த ஆட்சியில் அறிவித்த சம்பள உயர்வு கிடைக்காததால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நிலகிரி ஆகிய இடங்களில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ) உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக, 335.26 ரூபாய் வழங்கப்படுகிறது.இதே போல், வால்பாறை, நீலகிரி, ஹைவோயிஸ், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும், தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 336.58 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், டான்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துடன், 12.50 ரூபாய்; தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு, ஐந்து ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்,கோவையில் நடந்த விழாவில், அப்போதைய முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.தற்போது, ஆட்சி மாறிய நிலையிலும் இன்று வரை தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:குறைவான சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் நிலையில், கூலி உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.அரசு அறிவித்த சம்பள உயர்வை பெற்றுத்தர தொழிற்சங்கங்களும் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, முந்தைய அரசு அறிவித்த சம்பளத்தை உயர்த்தி வழங்க, தற்போதைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X