பொது செய்தி

தமிழ்நாடு

விதைகளின் தரத்தில் சமரசம் கூடாது! மாநில விதைச்சான்று இயக்குனர் அறிவிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:''விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் விதைகள் தரமானவையாக இருப்பதை, உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என, மாநில விதைச் சான்று இயக்குனர் அறிவித்துள்ளார்.கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாநில விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின், இயக்குனர் சுப்பையன் அறிக்கை:தமிழகத்தில் ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக

பொள்ளாச்சி:''விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் விதைகள் தரமானவையாக இருப்பதை, உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என, மாநில விதைச் சான்று இயக்குனர் அறிவித்துள்ளார்.கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாநில விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின், இயக்குனர் சுப்பையன் அறிக்கை:தமிழகத்தில் ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல், பருத்தி, சிறுதானிய பயிர்கள், எண்ணெய் வித்துகள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், விதைகளின் தரத்தை உறுதி செய்ய, துறை சார்பில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நடப்பாண்டில், மாநிலம் முழுக்க செயல்படும் விதை விற்பனை நிலையங்களில், 17,848 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு பயிர்களின் விதைக்குவியல்களில் இருந்து, 9,779 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு, துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றில், 4.28 கோடி ரூபாய் மதிப்புள்ள, 563 டன் விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே, விதை உற்பத்தியாளர்கள் தரமான விதைகளை இனத்துாய்மை, புறத்துாய்மை, முளைப்பு திறனுடன் நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுபாட்டுடன் உற்பத்தி செய்ய வேண்டும். விதை ஆதாரம், விதைப் பண்ணை அமைத்த விபரம், மகசூல் கணக்கீடு ஆகியவை குறித்த பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட விதைப் பரிசோதனை மையங்களுக்கு விதை மாதிரிகளை ஆய்வுக்கு அளித்து, ஆய்வு முடிவுகளை வினியோகஸ்தர்களுக்கு விற்பனை பட்டியலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.அறிவிக்கை செய்யப்படாத தனியார் பயிர் ரகங்கள் உற்பத்தி செய்யும் போது, கோவை விதைச்சான்று இயக்குனரகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்த பிறகே விதை வினியோகம் செய்ய வேண்டும்.விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உரிய உரிமம் பெற்ற பிறகே, விதை விற்பனையில் ஈடுபட வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்ட முகவரியில் மட்டுமே விதைகளை இருப்பு வைக்க வேண்டும். உற்பத்தியாளர்களிடம் பெறப்பட்ட விதைகளை, கொள்முதல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ரகம், நிலை, கொள்கலன் அளவு, குவியல் எண், காலாவதி தேதி ஆகிய விபரங்களை பதிவேட்டில் பதிய வேண்டும்.விற்பனையின் போது, உரிய விபரங்கள் அடங்கிய விற்பனை பட்டியலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதில், வாங்கியவர், விற்றவர் வகையொப்பம் கட்டாயம் இடம் பெற வேண்டும்.வெளிமாநில நெல் ரகங்களை விற்பனை செய்யும் போது, அதற்குரிய படிவம் -2 பெற்று பராமரிக்கவும், ஆய்வின் போது பார்வைக்கு உட்படுத்தவும் வேண்டும். விதை இருப்பு, விலை குறித்த விபரங்களை, தினசரி பதிவு செய்து, அனைவரும் பார்க்கும் வகையில் அறிவிப்பு வைக்க வேண்டும். விதைகளை காற்றோட்டமுள்ள இடத்தில், ரகம், இனம், குவியல் வாரியாக சேமிக்க வேண்டும்.விதைகளில் குறைபாடுகள், வயல்வெளி பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில், விதைகள் சட்டம் - 1966; விதை விதிகள் - 1968; விதைக் கட்டுப்பாட்டு ஆணை - 1983, சுற்றுப்புறச் சூழல் சட்டம் - 1985 ஆகியவற்றின் படி, உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X