பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் மின் இணைப்பு விண்ணப்பம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
உடுமலை:மின் இணைப்பு மீதான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின்வாரியத்தில், புதிய மின் இணைப்பிற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், பலரும், புதிய மின் இணைப்பு கோரி, மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்கின்றனர். பலர், அந்தந்த

உடுமலை:மின் இணைப்பு மீதான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின்வாரியத்தில், புதிய மின் இணைப்பிற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், பலரும், புதிய மின் இணைப்பு கோரி, மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்கின்றனர். பலர், அந்தந்த பகுதிகளில் உள்ள 'பிரவுசிங் சென்டர்' வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். அப்போது, அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இணைப்பு வழங்க, காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுகிறது.இப்பிரச்னையில், உயரதிகாரிகள் கவனம் செலுத்தி, மின் இணைப்பு மீதான விண்ணப்பங்கள் மீது, காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறுகையில், 'மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால், ஏழு நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும். அதேநேரம், ஆவணத்தில் ஏதேனும் குறை இருந்தால் அதிகபட்சமாக, 60 நாட்களுக்குள் அந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், விண்ணப்பித்தவுடன், அதற்கான கட்டமைப்பு வசதி இருந்தால், விரைந்து இணைப்பு வழங்க வேண்டும். இதற்கு, அதிகாரிகளின் துரித நடவடிக்கை அவசியம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X