அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் கற்பிக்க தனி திட்டம் ; அரசுக்கு கமல் யோசனை

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : 'உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழ் கற்க, நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டம், தேர்வு முறை, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை உருவாக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து 17 ஆண்டுகளாகி ஆகிவிட்டன. ஆனால், மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என


சென்னை : 'உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழ் கற்க, நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டம், தேர்வு முறை, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை உருவாக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வலியுறுத்தி உள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை:தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து 17 ஆண்டுகளாகி ஆகிவிட்டன. ஆனால், மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில், 'தமிழ் மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, உயர் நீதிமன்றமே கண்டித்தது.'ஹிந்தி ஒழிக' என்பதுடன் கடமை முடியவில்லை. 'தமிழ் வாழ்க' என உரக்கச் சொல்வதோடு மட்டுமின்றி செயலிலும் காட்ட வேண்டும். பழம்பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்கள் நாம் என, வரலாறு நம்மை பழித்து விடும். ஆங்கிலம் தவிர, பிற மொழிகள் ஆபத்தில் உள்ளன. தினம்தோறும் மொழிகள் செத்து வருகின்றன.


latest tamil news



சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறுகிறது. சீன மொழியைக் கற்க, உலகில் 500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஆங்கிலத்திற்கு பிரிட்டிஷ் கவுன்சில்; ஜெர்மன் மொழிக்கு கோத்தே சென்ரம்; பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் ப்ராஞ்சசே என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. அவ்வளவு ஏன், ஹிந்தியைப் பரப்ப ஹிந்தி பிரச்சார சபா உள்ளது.ஆனால், தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற, இன்னமும் ஓர் அமைப்பு இங்கே இல்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழ் கற்க, நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டம், தேர்வு முறை, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் Pre KG முதல் ஆங்கில வழி கல்வி தொடர்ந்தால் என்ன? ஆறாம் வகுப்பில் தமிழ் (தாய் மொழி அல்லது அவரவர் விருப்ப மொழி) ஒரு மொழிப்பாடமாக ஆரம்பித்து பத்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயமாக்கலாம்
Rate this:
Cancel
ellar - New Delhi,இந்தியா
21-ஜூலை-202120:37:36 IST Report Abuse
ellar துக்கடா தலை முதலில் திமுக டீவீக்களின் ஆர்.ஜேக்களுக்கு டமிலுக்கு பதில் தமிழ் சொல்லி தரட்டும். உலகில் 75% பிரச்சினை தீர்ந்துவிடும்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-ஜூலை-202113:38:49 IST Report Abuse
Milirvan //எந்த விதத்திலும் தகுதி இல்லாத வானதியை // எந்த விதத்திலும் தகுதி இல்லாத தகுதி கமாலுக்குத்தான் உள்ளது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X