பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி களமில்லை! மைதானத்தில் விளையாட ஆர்வம்:'ஸ்டேடியம்' அமைக்க எதிர்பார்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் விளையாட்டு வீரர்களின் திறமை மேம்படுத்த, உயர் தரம் வாய்ந்த, 'ஸ்டேடியம்' அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் செயல்படுகின்றன. பள்ளிகளில் போதுமான மைதானம் பராமரிப்பின்றி உள்ளன.பல பள்ளிகளில், மைதானங்கள் வகுப்பறை கட்டடங்களாக
 பயிற்சி களமில்லை! மைதானத்தில் விளையாட ஆர்வம்:'ஸ்டேடியம்' அமைக்க எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் விளையாட்டு வீரர்களின் திறமை மேம்படுத்த, உயர் தரம் வாய்ந்த, 'ஸ்டேடியம்' அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் செயல்படுகின்றன. பள்ளிகளில் போதுமான மைதானம் பராமரிப்பின்றி உள்ளன.பல பள்ளிகளில், மைதானங்கள் வகுப்பறை கட்டடங்களாக மாறியுள்ளதால், விளையாட்டுத்திறமையை மேம்படுத்த முடியாத சூழல் உள்ளது.ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளுக்கு வீரர்களை அதிகளவு தயார்படுத்தவும்; மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.தொடர் பயிற்சி கொடுக்க முடியாததால், மாணவர்கள் போட்டிக்கு சென்றாலும் ஜொலிக்க முடிவதில்லை. இதனால், வீரர்கள் பயிற்சி பெற கோவை ஸ்டேடியத்துக்கு செல்ல வேண்டியதுள்ளதால் அவதிப்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொள்ளாச்சியில் 'ஸ்டேடியம்' அமைக்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் நீங்காத கனவாக உள்ளது.பல்வேறு விளையாட்டு திறமைகள் இருந்தாலும், பல மாணவர்கள், இளைஞர்களால் சாதிக்க முதியாத நிலை உள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி தடகள சங்கம், கால்பந்து கழகம், பொதுமக்கள், மாணவ, மாணவியர் சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி தாலுகாவில், 100 பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. விளையாட்டு திறனை மேம்படுத்தவும், காவல்துறை தேர்ச்சிக்காக பயிற்சி, பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய மூன்று மைதானங்கள் மட்டும் பொள்ளாச்சியில் உள்ளது.சமத்துார் ராமஐயங்கார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 200 மீட்டர் ஓடுதளத்துடன் கால்பந்து மைதானமும் இருந்தது. அங்கு, 'ஸ்கேட்டிங்' மைதானம், மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மைதானம் யாருக்கும் பயன்பாடு இல்லாமல் உள்ளது.மேலும், பள்ளியின் மற்றொரு மைதானத்தில், கல்லுாரி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சர்க்கஸ் மைதானத்தில், பொருட்காட்சி, வர்த்தக பொருட்காட்சி, விளையாட்டு போட்டிகள் நடந்து கொண்டு இருந்தன.தற்போது, இந்த இடத்தில் பாதாள சாக்கடை, ரோடு பணிக்காக தோண்டப்பட்ட கழிவுகள், கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தடகள சங்கம் சார்பில், 400 மீட்டர் ஓடுதளம், நடுவே ஒரு கால்பந்து மைதானம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.தினமும், 800க்கும் மேற்பட்ட மக்கள், மாணவர்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மைதானத்தின் ஒரு பகுதியில், கூடைபந்து, கைபந்து, கபடி விளையாட இடம் இருந்தது. இங்கும், 'ஸ்கேட்டிங்' மைதானம் அமைத்து பயன்பாடு இல்லாமல், 'குடி'மகன்களின், 'பார்' ஆக மாறியுள்ளது.பொள்ளாச்சியில் ஸ்டேடியம் அமைக்கப்படும் என, தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி மட்டும் அளிக்கப்படுகிறது. ஆனால், 'ஸ்டேடியம்' வரவில்லை. கடந்த காலங்களில் பலமுறை நிதி ஒதுக்கப்பட்டும், நிறைவேறாமல் போய்விட்டது.விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த, நவீன ஸ்டேடியம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X