பிரச்னைக்கு வித்திடும் குடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

  பிரச்னைக்கு வித்திடும் 'குடி'

Added : ஜூலை 21, 2021
Share
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிமகன்கள் கண்ட இடத்தில் உட்கார்ந்து குடித்து விட்டு, மதுபாட்டில்களை உடைத்து வீசி எறிவதால் விவசாயிகள் , மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் காலில் குத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் கடைகள் ஊருக்குள் இருந்ததால் பலவித பிரச்னைகள் ஏற்பட பிரச்னை உள்ள கடைகள் நகரின் வெளியே புறநகர் பகுதிகளில் இயங்கி

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிமகன்கள் கண்ட இடத்தில் உட்கார்ந்து குடித்து விட்டு, மதுபாட்டில்களை உடைத்து வீசி எறிவதால் விவசாயிகள் , மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் காலில் குத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டாஸ்மாக் கடைகள் ஊருக்குள் இருந்ததால் பலவித பிரச்னைகள் ஏற்பட பிரச்னை உள்ள கடைகள் நகரின் வெளியே புறநகர் பகுதிகளில் இயங்கி வருகின்றன. ஊருக்கு வெளியில் உள்ள கடைகளை தேடி வரும் 'குடிமகன்கள்' சரக்குகளை வாங்கி, மரத்தடிகள், விவசாய நிலங்களின் வரப்புகளில் உட்கார்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர்.போதை தலைக்கு ஏறியதும் காலி மதுபாட்டில்களை உடைத்து வயல்பகுதிகளில் போடுகின்றனர். இதன் கூடவே பயன்படுத்திய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் கவர்களையும் வீசி எறிகின்றனர்.

மண்ணோடு மண்ணாக கலந்து விடுவதால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் கால்களில் பாட்டில் துண்டுகள் குத்தி நடக்க முடியாமல் செய்து விடுகிறது. புற்களில் மேயும் போது பிளாஸ்டிக் கழிவுகளையும் தின்று சிரமப்படுகின்றன. இது போல் நிலத்தை உழும் விவசாயிகளின் கால்களிலும் பாட்டில் துண்டுகள் குத்தி விடுகின்றன. மாவட்டத்தின் பல பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை உடைத்து விவசாய நிலங்கள் , நடைபாதைகளில் எறியப்படுகின்றன.

புறநகர் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தான் இதுபோன்ற தொல்லைகள் அதிகம் ஏற்படுகின்றன. போலீசார்தான் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்..........மாற்று ஏற்பாடு அவசியம்காலி மது பாட்டில்களை திரும்ப கொடுத்தால் அதற்கு ஒரு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து, அதையும் டாஸ்மாக் கடையிலேயே வாங்க ஏற்பாடு செய்தால் இது போன்ற பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கிட்டும்.இது மட்டுமன்றி தெருக்கள் ரோடுகள்,வயல் பகுதிகளில் மது அருந்துவோரை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனகராஜ், சமூக ஆர்வலர் ,அருப்புக்கோட்டை....................

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X