பொது செய்தி

தமிழ்நாடு

ஐலேசா... ஐலேசா... அரசு பஸ்களின் நிலை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
உடுமலை, :பேட்டரி பழுது காரணமாக, பஸ் ஸ்டாண்ட்டில் 'ஸ்டார்ட்' செய்த நிலையிலேயே அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.உடுமலையில் செயல்படும், அரசு போக்குவரத்துக்கழக கிளையில், 36 புறநகர் பஸ், 58 டவுன் பஸ்கள் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தற்போது, 33 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இங்குள்ள டவுன் பஸ்களில் பெரும்பாலானவை, வெளியூரில் இயக்கப்பட்டு, காலாவதியான நிலையில், இந்த
 ஐலேசா... ஐலேசா...  அரசு பஸ்களின் நிலை

உடுமலை, :பேட்டரி பழுது காரணமாக, பஸ் ஸ்டாண்ட்டில் 'ஸ்டார்ட்' செய்த நிலையிலேயே அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.உடுமலையில் செயல்படும், அரசு போக்குவரத்துக்கழக கிளையில், 36 புறநகர் பஸ், 58 டவுன் பஸ்கள் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தற்போது, 33 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இங்குள்ள டவுன் பஸ்களில் பெரும்பாலானவை, வெளியூரில் இயக்கப்பட்டு, காலாவதியான நிலையில், இந்த கிளைக்கு வழங்கப்பட்டவை.உடுமலையில் இருந்து, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள், பெரும்பாலும் பழுதடைந்தே காணப்படுகிறது.குறிப்பாக, பயணிகள் ஏறும் படிக்கட்டில் உடைப்பு, கதவு மற்றும் ஜன்னல் ஓர கண்ணாடிகள் இல்லாமை, பேட்டரி பழுது என, பல பிரச்னைகள் உள்ளன.இதில், பேட்டரி சரியாக செயல்படாத பஸ்களை, தள்ளிவிட்டு, 'ஸ்டார்ட்' செய்யும் நிலை உள்ளது. இதனால், டிரைவர்கள் சிலர், ஸ்டாண்ட்டில் நிறுத்தப்படும் பஸ்சை ஸ்டார்ட் செய்த நிலையிலேயே நிறுத்துகின்றனர்.இதனால், எரிபொருள் செலவு ஆவதோடு, பஸ் எந்த நேரத்தில் நகருமோ என பதட்டத்தில் பயணிகள் மனநிலை மாறி விடுகிறது.ஊரடங்கு காரணமாக, இரு மாதங்களுக்கும் மேலாக பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதே இதற்கு காரணம் என, டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.அதேநேரம், சிலர், போக்குவரத்துக்கழகத்தில், பழுதான பொருளுக்கு மாற்றாக 'ஸ்பேர்ஸ்' அனுப்பி வைக்கப்படுவதும் கிடையாது எனவும், புகார் தெரிவிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'பேட்டரி பழுதை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்சில் உள்ள பேட்டரியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு மாற்றாக வேறோரு பேட்டரி அமைக்கப்படுகிறது,' என்றனர்.காலாவதி பஸ்கள் மாற்றப்படுமா?பேட்டரி பிரச்னை உள்ள பஸ்கள், ஸ்டாண்ட்டில் ஸ்டார்ட் செய்த நிலையில் நிறுத்தப்படுகிறது. திடீரென, பஸ்சின் இயக்கம் 'ஆப்' நிலைக்கு மாறினால், தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்ய, 10 க்கும் மேற்பட்டவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. காலாவதியான பஸ்களை, நிர்வாகம் தான் மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X