பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களுக்கு அதிக பஸ்கள் இயக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிளை - 1ல், 40 டவுன் பஸ்கள், 27 வெளியூர் பஸ்கள் என, 67 பஸ்கள்; கிளை - 2ல், 34 டவுன் பஸ்கள், 26 வெளியூர் பஸ்கள் என, 60 பஸ்கள்; கிளை - 3ல், 35 டவுன் பஸ்கள், 29 வெளியூர் பஸ்கள் என 64 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், கடந்த, 5ம் தேதி முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் கட்டமாக, பொள்ளாச்சி அரசு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிளை - 1ல், 40 டவுன் பஸ்கள், 27 வெளியூர் பஸ்கள் என, 67 பஸ்கள்; கிளை - 2ல், 34 டவுன் பஸ்கள், 26 வெளியூர் பஸ்கள் என, 60 பஸ்கள்; கிளை - 3ல், 35 டவுன் பஸ்கள், 29 வெளியூர் பஸ்கள் என 64 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், கடந்த, 5ம் தேதி முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் கட்டமாக, பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளி மாவட்டங்கள், வெளியூர்கள், கிராமங்களுக்கு, 40 - 50 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன.அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லும் பஸ்கள், எல்லையுடன் நிறுத்தப்பட்டன. அங்கிருந்தும் தமிழகத்துக்குள் பஸ்கள் வருவதில்லை. அதே சமயம், பஸ் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்ததால், கூட்ட நெரிசலை குறைக்க வேண்டி, டவுன் பஸ்கள் மற்றும் வெளியூர் பஸ்களின் எண்ணிக்கையை, 80 - 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் இன்னும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X