பொது செய்தி

தமிழ்நாடு

சிஞ்சுவாடி கோவில் நிலம் 124 ஏக்கர் மீட்கப்படுமா! ஒப்படைத்த 12.16 ஏக்கர் அளவீடு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர் நிலத்தை சுவாதீனத்தில் வைத்திருந்தவர், தானாக முன் வந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த நிலம் அளவீடு பணி நேற்று நடந்தது. மீதம் உள்ள, 124 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர்
 சிஞ்சுவாடி கோவில் நிலம் 124 ஏக்கர் மீட்கப்படுமா! ஒப்படைத்த 12.16 ஏக்கர் அளவீடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர் நிலத்தை சுவாதீனத்தில் வைத்திருந்தவர், தானாக முன் வந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த நிலம் அளவீடு பணி நேற்று நடந்தது. மீதம் உள்ள, 124 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திய லட்சுமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ், கடந்தாண்டு அக்., மாதம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.நேற்று முன்தினம் நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. மாரியம்மன், அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், நிலம் அளவீடு செய்யப்பட்டது. அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், 'விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது அறநிலையத்துறை சட்டப்பிரிவு, 78ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஞ்சுவாடியில், பாளையப்பட்டு ஜம்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சிறுதுண்டி அம்மன் கோவில், மாலப்பட்டி பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களுக்கு சொந்தமான, 136 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில், 12 ஏக்கர், சுவாதீனத்தில் வைத்து இருந்தவர் ஒப்படைத்துள்ளார்.இந்நிலையில், மீதம் உள்ள, 124 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. நிலத்தை மீட்க, அதிகாரிகள் இம்மியளவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தை மீட்டு, பராமரிப்பில்லாமல் உள்ள கோவில்களை புனரமைக்கவும், தினமும் பூஜைகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சிஞ்சுவாடி பாளைய வாரிசுதாரர் தண்டபாணி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோன்று, பொள்ளாச்சியிலும், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X