பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3 கோடிக்கு மாடு வர்த்தகம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வெளிமாநிலங்கள்; பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி சந்தைக்கு, மாடு வரத்து அதிகரித்து
 ரூ.3 கோடிக்கு மாடு வர்த்தகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வெளிமாநிலங்கள்; பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி சந்தைக்கு, மாடு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம், இரண்டாயிரம் மாடுகள் வரத்து இருந்தது; கேரள வியாபாரிகள் வருகையால், வர்த்தகமும் விறுவிறுப்பாக நடந்தது.நாட்டு காளை, 70 - 75 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு, 40 - 45 ஆயிரம், நாட்டு எருமை, 40 - 45 ஆயிரம்; முரா, 55 - 60 ஆயிரம், ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 500 வியாபாரிகள் பங்கேற்றனர். மூன்று கோடிக்கு வர்த்தகம் நடந்தது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X