சறுக்கி விடும் சகதி; இருள் தரும் இன்னல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சறுக்கி விடும் சகதி; இருள் தரும் இன்னல்

Added : ஜூலை 21, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்துார், : மழை பெய்தால் சகதியாகும் ரோடுகள், குடிநீர் பற்றாக்குறை, சிதைந்த மின்கம்பம், சாக்கடை இல்லாததால் தேங்கும் கழிவுநீர், மின் விளக்குகள் இன்றி இருள் போன்ற பல்வேறு அடிப்படை பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் தெய்வேந்திரி பசும்பொன் நகர் மக்கள்.இப்பகுதியின் பல்வேறு தெருக்களில் முறையான ரோடு இல்லை. நுழைவு பகுதி மின்

ஸ்ரீவில்லிபுத்துார், : மழை பெய்தால் சகதியாகும் ரோடுகள், குடிநீர் பற்றாக்குறை, சிதைந்த மின்கம்பம், சாக்கடை இல்லாததால் தேங்கும் கழிவுநீர், மின் விளக்குகள் இன்றி இருள் போன்ற பல்வேறு அடிப்படை பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் தெய்வேந்திரி பசும்பொன் நகர் மக்கள்.இப்பகுதியின் பல்வேறு தெருக்களில் முறையான ரோடு இல்லை. நுழைவு பகுதி மின் கம்பமும் சிதைந்து காணப்படுகிறது. சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு தொல்லையை ஏற்படுத்துகிறது. தாமிரபரணி தண்ணீர் கிடைக்காததால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை காணப்படுகிறது. மின் கம்பங்கள் இருந்தும் விளக்குகள் பொருத்தப்படாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. மொத்தத்தில் இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரிக்கும் நிலையில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X