சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மூதாட்டியை தாக்கி நகை பறிப்புராஜபாளையம்: தர்மாபுரம் தெருவை சேர்ந்தவர் அன்னம்மாள் 63. கணவர் வேலாயுத ராஜா இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு வாடகைக்கு வேண்டி பெண் ஒருவர் கேட்டுள்ளார்.மாடியை சுற்றி காட்டி திரும்பி வந்தபோது தண்ணீர் தொட்டி மூடியால் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். சப்தம் கேட்டு வந்த

மூதாட்டியை தாக்கி நகை பறிப்புராஜபாளையம்: தர்மாபுரம் தெருவை சேர்ந்தவர் அன்னம்மாள் 63. கணவர் வேலாயுத ராஜா இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு வாடகைக்கு வேண்டி பெண் ஒருவர் கேட்டுள்ளார்.மாடியை சுற்றி காட்டி திரும்பி வந்தபோது தண்ணீர் தொட்டி மூடியால் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பச்ச மடம் பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் 37, என்பது தெரிந்தது. காயமடைந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிப்புசிவகாசி: திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பட்டாசு வியாபாரி காளிராஜன் 38. இந்திரா நகரை சேர்ந்த சுந்தருக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் திருப்பி தராததால் நடவடிக்கை கோரி திருத்தங்கல் போலீசில் முறையிட்டும், விசாரணையை தாமதம் செய்தனர். மனமுடைந்த காளிராஜன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X