பொது செய்தி

இந்தியா

கேரளாவில் நாளை முதல் தீவிர மழைக்கு வாய்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் நாளை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.கேரளாவில் இடுக்கி உட்பட மலையோர மாவட்டங்களில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது.மாநிலத்தில் நாளை(ஜூலை 22) முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை இடுக்கி, கோழிக்கோடு

மூணாறு:கேரளாவில் நாளை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கேரளாவில் இடுக்கி உட்பட மலையோர மாவட்டங்களில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது.மாநிலத்தில் நாளை(ஜூலை 22) முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாளை இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் இடுக்கி, எர்ணாகுளம்,கண்ணுார் மாவட்டங்களுக்கும் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X