போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு வாகனங்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு வாகனங்கள் ஆய்வு

Added : ஜூலை 21, 2021
Share
உடுமலை:வழக்கு வாகனங்கள் தவிர பிற வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன்களிலுள்ள பறிமுதல் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.போலீசாரால், விபத்து, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களும், மது போதையில் வாகனங்கள் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் வாகனங்கள்

உடுமலை:வழக்கு வாகனங்கள் தவிர பிற வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன்களிலுள்ள பறிமுதல் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.போலீசாரால், விபத்து, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களும், மது போதையில் வாகனங்கள் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்கள், நீதிமன்ற சொத்தாக உள்ளது.மற்ற வாகனங்கள், உரிய அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு, ஒப்படைக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் முறையாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமலும், பராமரிப்பு இல்லாமல், பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன் வளாகங்கள் பழைய வாகனங்களின் குடோனாக மாற்றப்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்களை மட்டும், உரிய வழக்கு பதிவு எண் குறித்து, பாதுகாப்பாக வைக்கவும், மற்ற வாகனங்களை கணக்கெடுத்து, உரிமையாளரிடம் அபராதம் வசூலித்து, திரும்ப ஒப்படைக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், உடுமலை பகுதியிலுள்ள ஸ்டேஷன்களில், பழைய வாகனங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளது. உரிய முறையில் கணக்கெடுத்து, நீதிமன்ற வாகனங்களைத்தவிர, மற்ற வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X