தடுப்பு வேலி இருக்கு... ஆனால் வேலிதாண்டலாம் காற்றில் பறக்கும் உத்தரவால் கலங்கும் குமரி மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பு வேலி இருக்கு... ஆனால் வேலிதாண்டலாம் காற்றில் பறக்கும் உத்தரவால் கலங்கும் குமரி மக்கள்

Added : ஜூலை 21, 2021
Share
நாகர்கோவில்:எல்லைகளில் தடுப்பு வேலி இருந்தாலும் வேலி தாண்டுவதை தடுக்க யாரும் இல்லாததால் கேரளாவில் இருந்து மீண்டும் குமரிக்கு கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில் ஆளும் கம்யூ., அரசு என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கொரோனா அடங்க மறுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அலையில் இன்னும் தினசரி பாதிப்பு ஒன்பதாயிரமாக நீடிக்கிறது. இதற்கிடையில் பக்ரீத்துக்காக தளர்வுகள்

நாகர்கோவில்:எல்லைகளில் தடுப்பு வேலி இருந்தாலும் வேலி தாண்டுவதை தடுக்க யாரும் இல்லாததால் கேரளாவில் இருந்து மீண்டும் குமரிக்கு கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஆளும் கம்யூ., அரசு என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கொரோனா அடங்க மறுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அலையில் இன்னும் தினசரி பாதிப்பு ஒன்பதாயிரமாக நீடிக்கிறது. இதற்கிடையில் பக்ரீத்துக்காக தளர்வுகள் வேறு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேரள மக்கள் பல இடங்களுக்கும் சுற்ற தொடங்கி விட்டனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு பக்கத்தில் இருப்பது கன்னியாகுமரி. வார விடுமுறை நாட்களிலும், பக்ரீத் தளர்விலும் இங்கு அதிக அளவில் கேரள மக்கள் வருகின்றனர். மாநிலங்களுக்கிடையே தளர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தமிழக கேரள எல்லைகளில் ஒன்றான களியக்காவிளையில் எந்த பரிசோதனையும் இல்லை. இங்கு தடுப்பு வேலிகள் உள்ளது. ஆனால் கண்காணிக்க யாரும் இல்லை.

இரண்டு போலீசார் இருக்கின்றனர். அவர்களும் அலைபேசியில் பிசியாக இருக்கின்றனர். எவ்வித சோதனையும் இல்லாமல் கேரள மக்கள் வரத்து அதிகமாக உள்ளதால் குமரியில் கொரோனாவும் கூடி வருகிறது. தினசரி பாதிப்பு சில நாட்களில் 50 ஆக உயருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை இன்னும் ஒரு மாதத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பொருட்கள் வாங்க அதிக அளவில் கேரள மக்கள் குமரி மாவட்டம் வருவார்கள்.

மூன்றாவது அலை அச்சம் உள்ள நிலையில் மாநில எல்லையில் சோதனை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. வேலிகளை அமைத்து விட்டு வேடிக்கை பார்க்காமல் மீண்டும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X