எங்களுக்கும் சுய மரியாதை உண்டு திருநங்கைகள் உருக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் சுய மரியாதை உண்டு திருநங்கைகள் உருக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
சிவகாசி : 'எங்களுக்கும் சுய மரியாதை உண்டு, வேலை பார்த்துதான் வாழ நினைக்கிறோம்,'என, திருநங்கைகள் உருக்கமாக தெரிவித்தனர்.சிவகாசி போலீசார் சார்பில் நடந்த திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது: எங்களுக்கும் சுயமரியாதை உண்டு.பட்டாசு ஆலைகளில் வேலைக்கு சென்றோம். ஆனால் எங்களை கேலிப் பொருளாக பார்ப்பதால் வேலை செய்ய முடியவில்லை. ஆடு, போன்ற கால்நடைகள்

சிவகாசி : 'எங்களுக்கும் சுய மரியாதை உண்டு, வேலை பார்த்துதான் வாழ நினைக்கிறோம்,'என, திருநங்கைகள் உருக்கமாக தெரிவித்தனர்.

சிவகாசி போலீசார் சார்பில் நடந்த திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது: எங்களுக்கும் சுயமரியாதை உண்டு.பட்டாசு ஆலைகளில் வேலைக்கு சென்றோம். ஆனால் எங்களை கேலிப் பொருளாக பார்ப்பதால் வேலை செய்ய முடியவில்லை. ஆடு, போன்ற கால்நடைகள் வளர்க்கவும் முடியவில்லை. வேலைவாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக செய்வோம், என்றனர். பாபுபிரசாந்த் டி.எஸ்.பி., தலைமை வகித்தார்.மாவட்ட விருச்சம் மகளிர் முன்னேற்ற சங்கம் செயலாளர் விஜயா, டவுன் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் முன்னிலை வகித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X