அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர் போராட்டத்தை சிலர் தூண்டி விடலாம்:எச்.ராஜா பேட்டி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:மத்திய அரசுக்கு எதிராக மீனவர் போராட்டத்தை சிலர் துாண்டி விடலாம், என்று ராமநாதபுரத்தில் எச்.ராஜா கூறினார்.அவர் கூறியதாவது:தமிழ்நாடு என்றால் அது தனி. எந்த பிரச்னை என்றாலும் டில்லி தலைவர்கள் கூறினால் அதை எதிர்க்காவிட்டால் தமிழன் இல்லை, என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் நீட் தேர்வு

ராமநாதபுரம்:மத்திய அரசுக்கு எதிராக மீனவர் போராட்டத்தை சிலர் துாண்டி விடலாம், என்று ராமநாதபுரத்தில் எச்.ராஜா கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழ்நாடு என்றால் அது தனி. எந்த பிரச்னை என்றாலும் டில்லி தலைவர்கள் கூறினால் அதை எதிர்க்காவிட்டால் தமிழன் இல்லை, என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் நீட் தேர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதை மாற்ற முடியாது. ஆனால், நாங்கள் வந்தால் மாற்றுவோம் என்கின்றனர். அப்படி சொல்லாவிட்டால் அவர்கள் தமிழன் இல்லை. இப்படி செயல்படுவது நல்லதல்ல. நாட்டிற்கு நம் ஒற்றுமை தான் பலம். பலவீனப்படுத்த யார் முயற்சித்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்.

சில விஷங்களில் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். சிலவற்றில் மாநிலம், மத்திய அரசுகள் சட்டம் இயற்றலாம். இதில் மத்திய, மாநில அரசுகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கே அதிகாரம், என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.தி.மு.க., காங்., ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது ஏழு ஆண்டுகளில் ஒரு சம்பவம் மட்டுமே நடந்துள்ளது.

இரட்டை மடி வலையை இலங்கை மீனவர்கள் பயன்படுத்த கூடாது என்ற சட்டம் அங்கு உள்ளது. அதை நாம் மீற முடியாது.அதனால் தான் பிரதமர் மோடி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்கியுள்ளார். தற்போதுமீனவர்கள் போராட்டத்திற்கு நோக்கம் கற்பிக்க முடியாது. விவசாயிகள் பிரச்னையில் விவசாயிகள் போராடவில்லை. பாதிக்கப்பட்ட இடைத்தரகர்கள் போராடினர்.

அதுபோல் மீனவர் போராட்டத்தை சிலர் துாண்டிவிடலாம். அதே நேரம், யாருக்கு எந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கருதினாலும் அவர்களோடு திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார், என்றார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X