கூடுதல் கருங்கல் பாரம்: 4 லாரிகளுக்கு அபராதம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, கேரளாவுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல், எம்சான்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிகவேகம், கூடுதல் பாரம், அனுமதி சீட்டு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் லாரிகள் அடிக்கடி பிடிபடுகின்றன.கடந்த இரு நாட்களில், கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான

கிணத்துக்கடவு:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, கேரளாவுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல், எம்சான்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிகவேகம், கூடுதல் பாரம், அனுமதி சீட்டு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் லாரிகள் அடிக்கடி பிடிபடுகின்றன.கடந்த இரு நாட்களில், கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், கேரளா எல்லையான வீரப்பகவுண்டனுார் மற்றும் கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டு, நான்கு வாகனங்களை பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.அனைத்து லாரிகள் மீதும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பாரம் ஏற்றிச்சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று, லாரி உரிமையாளர்கள் ஸ்டேஷனில் ஆஜராகி, ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 460 ரூபாய் அபராதம் செலுத்தியதால், லாரிகள் விடுவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X