சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரள வாலிபர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கூடலுார்:தேனி மாவட்டம் கூடலுார் அருகே எல்லைப்பகுதியான செல்லார்கோயில் மெட்டில் தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்த சோஜன் 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் அருகே தமிழக-கேரள எல்லை செல்லார்கோயில் மெட்டு வனப்பகுதியில் ஜூன் 30 இரவில் வனவிலங்கு வேட்டையாட வந்த கேரள கும்பலுக்கும் தமிழக வனத்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாட்டு துப்பாக்கியால்
 தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரள வாலிபர் கைது

கூடலுார்:தேனி மாவட்டம் கூடலுார் அருகே எல்லைப்பகுதியான செல்லார்கோயில் மெட்டில் தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்த சோஜன் 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கூடலுார் அருகே தமிழக-கேரள எல்லை செல்லார்கோயில் மெட்டு வனப்பகுதியில் ஜூன் 30 இரவில் வனவிலங்கு வேட்டையாட வந்த கேரள கும்பலுக்கும் தமிழக வனத்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாட்டு துப்பாக்கியால் மேல்நோக்கி சுட்ட அக்கும்பல் வனக்காவலர் காஜாமைதீனை 41, அரிவாளால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியது.

வனத்துறையினர் கூடலுார் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடினர். கேரளா ஓடைமேடை சேர்ந்த சோஜன், ஓசூருக்கு தப்பி செல்ல லோயர்கேம்ப் வழியாக சென்றபோது இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நால்வரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X