தொண்டி அருகே 350 கிலோ மஞ்சள் பறிமுதல்: 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொண்டி அருகே 350 கிலோ மஞ்சள் பறிமுதல்: 4 பேர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
திருவாடானை:இலங்கைக்கு கடத்த தொண்டி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கலிமடம் கடற்கரையில் 350 கிலோ எடையுள்ள ஏழு மஞ்சள் மூடைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. தேவிபட்டினம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி எஸ்.ஐ. அய்யனார், இளையராஜா ஆகியோர் ரோந்து சென்ற

திருவாடானை:இலங்கைக்கு கடத்த தொண்டி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கலிமடம் கடற்கரையில் 350 கிலோ எடையுள்ள ஏழு மஞ்சள் மூடைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. தேவிபட்டினம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி எஸ்.ஐ. அய்யனார், இளையராஜா ஆகியோர் ரோந்து சென்ற போது அந்த மூடைகளை கைப்பற்றினர்.

தொண்டி கலந்தர் அலி 28, கலந்தர் ஆசிக் 29, கலந்தர் மைதீன் 25, ரகுமான் 27, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஒரு ஆட்டோ, ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மதிப்பு ரூ.16 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

* தேவிபட்டினம் கடற்கரையோரத்தில் அப்துல் வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டு இருந்தன. ராமநாதபுரம் உதவி வனக்காப்பாளர் கணேசலிங்கம் தலைமையிலான அலுவலர்கள், 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X