பொது செய்தி

தமிழ்நாடு

சீருடை ஆர்டர் வழங்க வேண்டும் விசைத்தறியாளர் வலியுறுத்தல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பல்லடம்:பள்ளி சீருடைகளுக்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும் என, உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் சூழலில், அரசு பள்ளி சீருடை ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்க வேண்டும் என, பல ஆண்டாக கோரிக்கை

பல்லடம்:பள்ளி சீருடைகளுக்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும் என, உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் சூழலில், அரசு பள்ளி சீருடை ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்க வேண்டும் என, பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை ஆர்டர்கள் கைத்தறிக்கும், சீருடைகள் ஆட்டோ லூம்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், விசைத்தறி தொழில் முதன்மை பெறுகிறது.சீருடை ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்குவதன் மூலம், இதை சார்ந்த உரிமையாளர்கள், மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். கடந்த மூன்று ஆண்டுக்கு முன், தறிகளை மேம்படுத்த மத்திய அரசு மானியம் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன்பின், எந்த சலுகையும் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், சீருடை ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X