பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'ஒன்றியக்குழு நிதியின் கீழ் நவீன முறையிலான கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டல்களில் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இயந்திரம் போன்று தானியங்கி முறையில் இது செயல்படும் என்பதால், இயந்திரத்தை தொட வேண்டிய

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'ஒன்றியக்குழு நிதியின் கீழ் நவீன முறையிலான கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டல்களில் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இயந்திரம் போன்று தானியங்கி முறையில் இது செயல்படும் என்பதால், இயந்திரத்தை தொட வேண்டிய அவசியம் இல்லை. இயந்திரத்தின் முன் கைகளை நீட்டினாலே, கிருமிநாசினி திரவம் வெளியாகும். அதனை கொண்டு, கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம். விரைவில், இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்,' என்றனர்.'பள்ளி மேற்கூரை மோசம்பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி - நொச்சிபாளையத்தில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இக்கட்டடம், 2018--19ல் சீரமைக்கப்பட்டது. தற்போது, வகுப்பறையின் மேற்கூரைகளில் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இது குறித்து, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது. அதில், மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிட மேற்கூரையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான கோரிக்கை மனு பி.டி.ஓ., மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.'எக்ஸ்ரே' எடுக்க முடியலேவெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், 11 டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ரத்த வங்கி இருந்தும் முழுமையாக பயன் பெறாத சூழல் உள்ளது. கண் மருத்துவ உதவியாளர் இருந்தும் கொரோனா மாற்று பணிக்குச் சென்றவர் திரும்பவில்லை. நோயாளிகள் 'எக்ஸ்ரே' எடுக்க வேண்டுமெனில், காங்கயம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். எனவே, உடனடியாக 'எக்ஸ்ரே' எடுக்க டெக்னீசியன் நியமிக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்து தேவைப்படும் பணியிடங்களை, உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.கப்' அடிக்குது ரோடு (படம்)திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பஸ் ஸ்டாப்பிலிருந்து கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து அருகேயுள்ள கழிவு நீர் கால்வாய்க்குச் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியேறும் கழிவு நீர், ரோட்டில் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் இதனை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி ஊழியர்களிடம் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், நேற்று வரை சரி செய்யப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஏ.சி., பஸ்கள் 'உறக்கம்' (படம்)திருப்பூரில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, சேலம், பொள்ளாச்சிக்கு ஏ.சி., பஸ் இயக்கப்பட்டது. சாதாரண பஸ்களோடு ஒப்பிடுகையில் இவற்றின் கட்டணம் அதிகமாக இருந்த போதும், குளுகுளு பயணம் என்பதால், பலரும் ஆர்வமுடன் பயணித்து வந்தனர். தொற்று பரவலால், 2020 மார்ச்சில் ஏ.சி., பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், ஏ.சி., பஸ்கள் இயங்க அனுமதிக்கவில்லை. அதன்பின், 13 மாதம் கடந்த பின்பும் பஸ் இயக்கத்துக்கு வரவில்லை. போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,'அரசின் அறிவிப்பு வந்த பின்னரே, ஏ.சி., பஸ்கள் இயக்கப்படும்,' என்றனர். என்றனர்.போகுமிடம் தெரியலே (படம்)பல்லடம் போக்குவரத்து பணிமனையின் கீழ், 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் உட்பட வெளியூருக்கு செல்கின்றனர். ஆனால், கிராம பகுதிகள் வழியாக செல்லும் சில பஸ்களில், வழித்தடம் குறித்த அறிவிப்பு இல்லை. பொதுமக்கள் கூறுகையில், 'பல்லடத்தில் இயங்கும் சில பஸ்களில் எந்த அறிவிப்பும் இல்லை. பஸ்சின் முன், மற்றும் பின் பக்கத்தில் மட்டுமே செல்லும் ஊரின் பெயர்கள் உள்ளன. பஸ்களின் பக்கவாட்டில் வழித்தடம் அறிவிப்புகள் இருந்தால், குழப்பமின்றி பஸ் ஏறி செல்ல முடியும். எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.பி.எம்.எஸ்., செயற்குழுபாரதிய மஸ்துார் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். பி.எம்.எஸ்., ஸ்தாபக தினத்தை முன்னிட்டு கொடியேற்றி விழா நடத்துவது, மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் மற்றும் அமைப்பு சாரா பணிகள் மேற்கொள்வது, அனைத்து தொழிலாளர்களும் கட்டாயம் விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு செய்து கொள்வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கைத்தறி, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.பயணிகள் நிழற்குடை (படம்)அவிநாசி அருகே பழங்கரை - ஆயிக்கவுண்டம்பாளையத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பிரசாத்குமார் முயற்சியால், ஒன்றிய பொது நிதி, 4 லட்சம் ரூபாயில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன், சந்திரசேகர், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.தியாகிகளுக்கு மரியாதைவெள்ளகோவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தியாகிகள் தினம் நடந்தது. சுதந்திரப்போராட்ட தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்கிற பாஷ்யம்,செண்பகராமன் ஆகியோர் திருவுருவப்படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர் மணி தி.மு.க., நகர செயலாளர் ராசிமுத்துக்குமார், நகர அவைத்தலைவர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.உயிர் பயத்துடன் மக்கள் (படம்)பொங்கலுார் பெருந்தொழுவு கைகாட்டி அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிரான்ஸ்பார்மரில் இரு மின் கம்பங்களும் காரை பெயர்ந்து கம்பி மட்டுமே மீதம் உள்ளது. அருகில் குடியிருப்புகள் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் கூட குடியிருப்புகள் மீது மின்கம்பம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அருகில் குடியிருக்கும் மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உடனடியாக இதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X