போலீஸ் டைரி : விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி : விபத்தில் ஒருவர் பலி

Added : ஜூலை 21, 2021
Share
திருச்சி, மணப்பாறையை சேர்ந்தவர் அருள் செல்வராஜ், 55. அதே பகுதியை சேர்ந்த அற்புதசாமி என்பவர் மகன் ஜான் வில்லியம்ஸ், 26. இருவரும் பைக்கில் கோவையில் இருந்துதிருச்சி நோக்கி சென்றனர். பொங்கலுார் மின்வாரிய அலுவலகம் அருகே, பைக் மீதுடிப்பர் லாரி மோதியது. இதில் அருள் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஜான் வில்லியம்ஸ் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். அவிநாசிபாளையம்

திருச்சி, மணப்பாறையை சேர்ந்தவர் அருள் செல்வராஜ், 55. அதே பகுதியை சேர்ந்த அற்புதசாமி என்பவர் மகன் ஜான் வில்லியம்ஸ், 26. இருவரும் பைக்கில் கோவையில் இருந்துதிருச்சி நோக்கி சென்றனர். பொங்கலுார் மின்வாரிய அலுவலகம் அருகே, பைக் மீதுடிப்பர் லாரி மோதியது. இதில் அருள் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஜான் வில்லியம்ஸ் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் தற்கொலைபொங்கலுார், கேத்தனூர் ஊராட்சி மானாசி பாளையத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் முதியவர் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் நேற்று காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 வயது மதிக்கத்தக்க அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X