தமிழ்நாடு

குழாய் உடைந்தது; குளம் உருவானது! சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் மேற்கு பகுதியில், குமரப்பபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இதன், 2வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழி தோண்டும் பணி துவங்கியது. இடம் அளவீடு செய்து, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி துவங்கியது.இயந்திரம் பணியை துவங்கிய இரண்டாவது நிமிடமே அப்பகுதியில் நிலத்தடியில் பதித்திருந்த குடிநீர் குழாய் உடைந்து
 குழாய் உடைந்தது; குளம் உருவானது! சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் மேற்கு பகுதியில், குமரப்பபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இதன், 2வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழி தோண்டும் பணி துவங்கியது. இடம் அளவீடு செய்து, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி துவங்கியது.இயந்திரம் பணியை துவங்கிய இரண்டாவது நிமிடமே அப்பகுதியில் நிலத்தடியில் பதித்திருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமாகி, குடிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியினர் குடிநீர் வெளியேறிய இடத்தை சுற்றிலும் மண் போட்டு தடுப்பு ஏற்படுத்தி, அருகேயுள்ள சாக்கடை கால்வாய்க்கு திருப்பி விட்டனர்.* இதேபோல, திருப்பூர், தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு - முத்தையன் கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியே வாகன ஓட்டிகள் சென்று வர சிரமப்படுகின்றனர். இவ்விரண்டு இடங்களிலும் குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீர் விரயத்தை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X