பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி,:நீர்வரத்தால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து 68.34 அடியானது.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு ஆறுகளில் இருந்து நீர் வரத்து உள்ளது. சில வாரமாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1335 கன அடியாக உள்ளது. அணை நீர் மட்டம் 68.34 அடியாக
 உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி,:நீர்வரத்தால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து 68.34 அடியானது.

வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு ஆறுகளில் இருந்து நீர் வரத்து உள்ளது. சில வாரமாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1335 கன அடியாக உள்ளது.

அணை நீர் மட்டம் 68.34 அடியாக இருந்தது.(மொத்த உயரம் 71 அடி).ஜூலை 8-ல் நீர்மட்டம் 66 அடியான போது அணையில் முதல் கட்டவெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று மதியத்திற்குள் 68.50 அடியாக உயர்ந்து விடும். அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

நீர் மட்டம் 69 அடியாகும் போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படும். வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X