பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு வழங்க உபகரணங்கள் வந்தாச்சு...

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக உபகரணங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு தருவிக்கப்பட்டன.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தற்போது பயனாளிகளுக்கு வழங்கும்

திருப்பூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக உபகரணங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு தருவிக்கப்பட்டன.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தற்போது பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் வாக்கர் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ஆகியன வந்துள்ளன.இவற்றை வழங்க அலுவலக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தகுதியுடைய பயனாளிகள் இதனை பெற விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தோருக்கும் பதிவு மற்றும் தகுதி அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X