மாட்டுச்சந்தை எப்போது கூடும்? கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுச்சந்தை எப்போது கூடும்? கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
திருப்பூர்:மாட்டுச்சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஊரடங்கு தளர்வில், பிற பகுதியில் சந்தை நடத்த கலெக்டர் அனுமதி வழங்கிய நிலையில், தென்னம்பாளையம் மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி வழங்கவில்லை.மாநகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளர் குழுவினர் சமீபத்தில் சந்தை நடக்குமிடத்தை ஆய்வு செய்து விட்டு

திருப்பூர்:மாட்டுச்சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஊரடங்கு தளர்வில், பிற பகுதியில் சந்தை நடத்த கலெக்டர் அனுமதி வழங்கிய நிலையில், தென்னம்பாளையம் மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி வழங்கவில்லை.மாநகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளர் குழுவினர் சமீபத்தில் சந்தை நடக்குமிடத்தை ஆய்வு செய்து விட்டு சென்றனர்.இதனால், ஆனால், நடப்பு வாரம் சந்தைக்கு அனுமதி வழங்கவில்லை. இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், விற்பனை களைகட்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தை நடக்காததால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.காரணம் கேரளாவா?மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் வியாபாரிகளை விட, கேரளா மாநிலத்தில் இருந்து அதிகமானோர் வருவர். ஒவ்வொருவரும், பத்துக்கும் அதிகமான மாடுகளை வாங்கி செல்வர். கொரோனா இரண்டாவது அலையின் வேகம் கேரளாவில் குறையவில்லை. இச்சூழலில் மாட்டுச்சந்தைக்கு அனுமதி வழங்குவது உகந்தது இல்லை என்பதால், கலெக்டர் ஒப்புதல் வழங்கவில்லை என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X