பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமநாதபுரம்- தனுஷ்கோடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கவும் ரூ.300 கோடியில் பாம்பன் கடலில் புதிய பாலம் அமைய உள்ள பகுதியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மதுரை முதல் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் மதுரை- ராமநாதபுரம் இடையே சாலை பணியை மத்திய அரசு முடித்தது. ராமநாதபுரம்- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்திட ஆய்வு
 தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை

ராமேஸ்வரம்:ராமநாதபுரம்- தனுஷ்கோடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கவும் ரூ.300 கோடியில் பாம்பன் கடலில் புதிய பாலம் அமைய உள்ள பகுதியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை முதல் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் மதுரை- ராமநாதபுரம் இடையே சாலை பணியை மத்திய அரசு முடித்தது. ராமநாதபுரம்- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்திட ஆய்வு நடக்கிறது.பாம்பன் கடலில் ரூ. 300 கோடியில் புதிய பாலம் அமைத்திட தேசிய நெடுஞ்சாலைதுறை ராமநாதபுரம் கோட்ட சிறப்பு வருவாய் அதிகாரி ராமசாமி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர், தனி தாசில்தார் உமா, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

புதிய சாலை: தற்போதைய பாம்பன் பாலத்தின் தெற்கு பகுதியில் 100 அடி துாரத்திலும், 45 அடி அகலத்திலும் புதிய பாலம் அமைய உள்ளது. பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை தற்போதைய ரயில் தண்டவாளத்திற்கு தெற்கு பகுதியில் 60 மீட்டர் அகலத்தில் அரசு, வனத்துறை, தனியாருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X