பொது செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் வெட்டி கடத்தல் போலீஸ் விசாரணை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில், குன்னத்துார் ரோடு, வெள்ளைகவுண்டன்புதுார் பிரிவில் நத்தம் புறம்போக்கு இடத்தில், இரண்டு வயதுள்ள, மூன்று சந்தன மரங்கள், 15 அடி உயரத்துக்கு வளர்ந்து இருந்தது.நேற்று காலை, அவற்றில் இரண்டு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை மக்கள்
 சந்தன மரம் வெட்டி கடத்தல் போலீஸ் விசாரணை

திருப்பூர்:திருப்பூர் அருகே சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில், குன்னத்துார் ரோடு, வெள்ளைகவுண்டன்புதுார் பிரிவில் நத்தம் புறம்போக்கு இடத்தில், இரண்டு வயதுள்ள, மூன்று சந்தன மரங்கள், 15 அடி உயரத்துக்கு வளர்ந்து இருந்தது.நேற்று காலை, அவற்றில் இரண்டு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை மக்கள் பார்த்தனர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'நேற்று இரவு (நேற்று முன்தினம்), 11:00 மணி வரை மக்கள் நடமாட்டம் இருந்தது. சந்தன மரம் உள்ள இடத்தை சுற்றியும் மக்கள் குடியிருப்பு உள்ளது. சந்தன மரம் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டு, நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் சத்தம் இல்லாமல் வெட்டி கடத்தி சென்றது தெரிந்தது. மர்ம நபர்கள் குறித்து, விசாரணை நடத்துகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X