பொது செய்தி

தமிழ்நாடு

200 ஆண்டுக்கு முந்தைய பிரிட்டிஷார் கல்லறை

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 200 ஆண்டுகளுக்கு முன் 50 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷாரை அடக்கம் செய்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.1810 ல் சென்னை கலெக்டராக இருந்தவர் ஐரோப்பாவை சேர்ந்த ஒயிட் எல்லீஸ். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் உள்ளதா என ஆராய ஐகோர்ட் அறிவுறுத்தியது.கலெக்டர் விசாகன் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகர்
 200 ஆண்டுக்கு முந்தைய பிரிட்டிஷார் கல்லறை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 200 ஆண்டுகளுக்கு முன் 50 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷாரை அடக்கம் செய்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.1

810 ல் சென்னை கலெக்டராக இருந்தவர் ஐரோப்பாவை சேர்ந்த ஒயிட் எல்லீஸ். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் உள்ளதா என ஆராய ஐகோர்ட் அறிவுறுத்தியது.கலெக்டர் விசாகன் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கல்லறையை நகருக்குள் தேடினர்.

காந்தி மார்க்கெட் அருகே காமராஜர்புரத்தில் பிரிட்டிஷாருக்கான கல்லறை தோட்டம் இருப்பது தெரிய வந்தது. புதர் மண்டி கிடந்த கல்லறை தோட்டத்தை துாய்மைப்படுத்திய போது 200 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷார் 54 பேரின் கல்லறைகள் இருப்பது தெரிந்தது. ஒய்ட் எல்லீஸின் கல்லறை இங்கு இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202111:43:53 IST Report Abuse
ராமகிருஷ்ணன் வெள்ளைக்கார விஷ விதைகளை புடிங்கி எறிந்து இடத்தை மக்களின் உபயோகத்திற்கு விடலா‌ம். அவமான வரலாறு தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X