பொது செய்தி

தமிழ்நாடு

3ம் அலையில் குழந்தைகள் பாதிப்பை தடுக்க தனி டீம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடுகள். விருதுநகர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 648 படுக்கைகள் உள்ளன. அதில் 460 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை. 30ல் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளன. 3ம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.3ம் அலை குழந்தைகளை பாதிக்குமா.குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என கூறப்பட்டாலும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. பெரியவர்கள்

கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடுகள். விருதுநகர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 648 படுக்கைகள் உள்ளன. அதில் 460 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை. 30ல் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளன. 3ம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.3ம் அலை குழந்தைகளை பாதிக்குமா.குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என கூறப்பட்டாலும் உறுதியான ஆதாரங்கள் இல்லை.

பெரியவர்கள் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவது போன்றவற்றை முறையாக மேற்கொண்டால் கொரோனாவிடம் இருந்து குழந்தைகளை பத்திரமாக காக்கலாம். இது தான் கொரோனா குழந்தைகளை தாக்காமல் காக்க வழி.கெரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளை கவனித்து கொள்ள குழந்தைகள் நல மருத்துவர் அடங்கிய தனி டீம் அமைக்கப்பட்டுள்ளது. 100 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளதா.6,000 லிட்டர் ஆக்சிஜன் டேங்க் தயார் நிலையில் உள்ளது. 2 வது அலை உச்சத்தில் இருந்த போதும் தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பு இருந்தது. அதன் பின்னரும் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளோம்.

3ம் அலையில் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்பட வாய்பில்லை.கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவாக வழங்கப்படுகிறதா.ஒரு நாளில் 4500 பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவுகளை தெரிவிப்பதற்கான வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் பரிசோதனைக்கான முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.3ம் அலையில் தற்காத்து கொள்ள செய்ய வேண்டியது.மூக்கையும் வாயையும் மூடும்படி முகக்கவசம் அணிந்தால் 3வது அலையில் இருந்து தப்பிக்கலாம். அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களும் தயக்கம் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.கரும்பூஞ்சை நோயாளிகளுக்கு வசதிகள்.கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் டயாபடிஸ் உடைய கொரோனா நோயாளிகள் தான் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளன.நடப்பு கல்வி ஆண்டிலே மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கி விடுமா.நேஷனல் மெடிக்கல் கமிஷனின் ஆய்விற்காக விண்ணப்பித்திருந்தோம். அந்த விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு நடைபெறும். அதன் பின்னர் மாணவர்கள் சேர்க்கைக்காண பணிகள் துவங்கும். நிச்சயம் நடப்பு கல்வி ஆண்டிலே மாணவர் சேர்க்கை நடைபெறும்.மருத்துவ கல்லுாரியில் புதிய வசதிகள்.மருத்துவ கல்லுாரியில் 5,000 மரங்களை நட்டு 'பயோ பென்சிங் ' அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உயிரியல் தோட்டம் ஒன்று அமைப்பதற்கும் திட்டமிட்டு உள்ளோம்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X