பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டம் முழுவதும் பரவுது பசுமை!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், கோனார்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் முழுவதும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி மூலம் பசுமை பரப்பு விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், இதுவரை மாவட்டத்தின் பல பகுதிகளில் 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இதில்
 மாவட்டம் முழுவதும் பரவுது பசுமை!

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், கோனார்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் முழுவதும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி மூலம் பசுமை பரப்பு விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், இதுவரை மாவட்டத்தின் பல பகுதிகளில் 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இதில் பெரும்பாலான பகுதிகளில், மரங்கள் தற்போது பெரியளவில் வளர்ந்து பலன் அளித்து வருகின்றன. அவ்வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 7ல், 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக தயார்படுத்தப்பட்ட, 75 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடும் பணி உரிய திட்டமிடலுடன் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இதுவரை, 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.வனத்துக்குள் திருப்பூர் - 7 திட்டத்தில் நேற்று தாராபுரம் அருகே கோனார்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. திருமலைசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 320 பியன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருமலைசாமி, செல்லாத்தாள் மற்றும் திட்ட கள அலுவலர்கள் பங்கேற்றனர்.மரக்கன்று நட விருப்பம் உள்ளோர், கள அலுவலரை 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X