பேரழிவு ஏற்பட்டால் தகவல் பரிமாற மூணாறில் சாட்டிலைட் போன் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பேரழிவு ஏற்பட்டால் தகவல் பரிமாற மூணாறில் 'சாட்டிலைட் போன்' வழங்கல்

Added : ஜூலை 21, 2021
Share
மூணாறு:கேரளா மூணாறில் பேரழிவு நேரங்களில் தகவல்களை தடங்கல் இன்றி எளிதில் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக சாட்டிலைட் போன்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மூணாறு மற்றும் சுற்றிலும் மலையோரப்பகுதி என்பதால் தகவல் தொடர்பு சரிவர கிடையாது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக. 6 இரவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 70 பேர் இறந்தனர்.அங்கு தொலை தொடர்பு வசதி இல்லாததால்

மூணாறு:கேரளா மூணாறில் பேரழிவு நேரங்களில் தகவல்களை தடங்கல் இன்றி எளிதில் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக சாட்டிலைட் போன்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூணாறு மற்றும் சுற்றிலும் மலையோரப்பகுதி என்பதால் தகவல் தொடர்பு சரிவர கிடையாது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக. 6 இரவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 70 பேர் இறந்தனர்.அங்கு தொலை தொடர்பு வசதி இல்லாததால் அந்த கோரச்சம்பவம் வெளி உலகிற்கு தெரிவதற்கு ஏற்பட்ட காலதாமதம் மூலம் உயிர்இழப்புகள் அதிகரித்தன.

அதனை தவிர்க்கும் வகையில் தடங்கல் இன்றி தகவல் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக சாட்டிலைட் போன்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மூணாறு, தேவிகுளம் போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றிற்கு தலா ஒரு போன் வீதம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சிக்னல்' இல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தலாம். அதில் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. அதனை கையாளும் விதம் குறித்து போலீஸ், வருவாய், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X