பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அவிநாசி:'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும்' என, போராட்டக்குழு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர்

அவிநாசி:'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும்' என, போராட்டக்குழு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் திரும்பிய நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும், பணிக்கு திரும்பியுள்ளனர்.திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டுமென, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், முதல்வருக்கு அனுப்பிய மனு:பெருந்துறை முதல், அன்னுார் பகுதி வரை, அத்திக்கடவு - அவிநாசி வரையிலான திட்டத்தில், பல குட்டைகள் விடுபட்டுள்ளன.விடுபட்ட குட்டை தொடர்பான ஆய்வுப்பணி, பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.திட்டத்தில், விடுபட்ட குட்டைகளை இணைத்து, தண்ணீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.அதிகாரிகள் சிலர் கூறுகையில்,''பல இடங்களில் இருந்தும், விடுபட்ட குளம், குட்டை தொடர்பான விவரங்களை, விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். அதனடிப்படையில், கள ஆய்வு நடத்தி வருகிறோம்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X