பொது செய்தி

தமிழ்நாடு

கார் திருடியவரிடம் விசாரணை: மூன்று வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூரில், கார்களை திருடிய நபரை, ஒரு நாள் 'கஸ்டடி' எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர் கூறிய தகவலால், மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூரில் கார் திருட்டு தொடர்ச்சியாக நடந்தது. திருடியவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. கடந்த, 12ம் தேதி, புதிய பஸ் ஸ்டாண்டில் மேற்கொண்ட வாகன தணிக்கையில், குளித்தலையை சேர்ந்த

திருப்பூர்;திருப்பூரில், கார்களை திருடிய நபரை, ஒரு நாள் 'கஸ்டடி' எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர் கூறிய தகவலால், மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூரில் கார் திருட்டு தொடர்ச்சியாக நடந்தது. திருடியவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. கடந்த, 12ம் தேதி, புதிய பஸ் ஸ்டாண்டில் மேற்கொண்ட வாகன தணிக்கையில், குளித்தலையை சேர்ந்த சுரேஷ், 47 என்ப வரை வடக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில், செம்மரக்கட்டை, எரிசாராயம் கடத்த, கார் உள்ளிட்ட வாகனங்களை திருடியது தெரிந்தது. இவர் மீது தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிந்தது. ஆறு வாகனம், 14 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்த,ஒரு நாள் 'கஸ்டடி' விசாரணைக்கு அனுமதி கேட்டு ஜே.எம்:1 கோர்ட்டில் வடக்கு போலீசார் விண்ணப்பித்து இருந்தனர்.மாஜிஸ்திரேட் அனுமதித்ததால், சுரேஷிடம் நேற்று ஒரு நாள்'கஸ்டடி' விசாரணை மேற்கொண்டனர்.சுரேஷ் கூறிய தகவல்களை வைத்து, மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். கஸ்டடி விசா ரணை முடிந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X