மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி முகாம்

Added : ஜூலை 21, 2021
Share
அவிநாசி:அவிநாசி தாலுகா அலுவலகத்தில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. இதற்கென, 100 'டோஸ்' மருந்து தருவிக்கப்பட்டது.ஆனால், இம்முகாம் குறித்து, முன்னறிவிப்பு செய்யப்படாததால், பலருக்கும் விவரம் தெரியவில்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளை, தாசில்தார் ராகவி பார்வையிட்டார். முகாமில், மொத்தம் 16 பேரே தடுப்பூசி செலுத்தி
 மாற்றுத்திறனாளிக்கு  தடுப்பூசி முகாம்

அவிநாசி:அவிநாசி தாலுகா அலுவலகத்தில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. இதற்கென, 100 'டோஸ்' மருந்து தருவிக்கப்பட்டது.ஆனால், இம்முகாம் குறித்து, முன்னறிவிப்பு செய்யப்படாததால், பலருக்கும் விவரம் தெரியவில்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளை, தாசில்தார் ராகவி பார்வையிட்டார். முகாமில், மொத்தம் 16 பேரே தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.எஞ்சிய தடுப்பூசியை, திரும்ப எடுத்துச் செல்ல, சுகாதாரத்துறையினர் முற்பட்டனர். இதற்கிடையில், கஸ்துாரிபா வீதியில் உள்ள பள்ளி கட்டடத்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 200 பேருக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டிருந்த நிலையில், 172 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மருந்து முடிந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் எஞ்சிய தடுப்பூசி மருந்தை செலுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X