மணல் திருட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 21, 2021
Share
மதுரை:திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் மணல் திருட்டு முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி தெற்கு கல்லிடைக்குறிச்சி சிவசங்கர் தாக்கல் செய்த மனு:எங்கள் பகுதியின் முக்கிய நீராதாரம் வண்டால ஓடை. தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. குறிப்பிட்ட சர்வே எண்ணில் 'எம்' சாண்ட் குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை:திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் மணல் திருட்டு முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி தெற்கு கல்லிடைக்குறிச்சி சிவசங்கர் தாக்கல் செய்த மனு:எங்கள் பகுதியின் முக்கிய நீராதாரம் வண்டால ஓடை. தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. குறிப்பிட்ட சர்வே எண்ணில் 'எம்' சாண்ட் குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக வண்டால ஓடையில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மணல் திருட்டை தடுக்க திருநெல்வேலி கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். சட்டவிரோத குவாரி குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சிவசங்கர் குறிப்பிட்டார்.

2020ல் விசாரணையின்போது நீதிபதிகள், 'மணல் திருட்டை தடுக்க இந்நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், பயனில்லை. அரசின் நடவடிக்கை என்பது காகித அளவில் மட்டுமே உள்ளது. தென் மாவட்டங்களில் இதே நிலைதான் உள்ளது. மாவட்ட, தாலுகா அளவில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு என்ன செய்கிறது,' என அதிருப்தி வெளியிட்டனர்.அரசுத்தரப்பு, 'அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கத் தவறிய வி.ஏ.ஓ.,சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,' என தெரிவித்தது.

நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: மணல் திருட்டு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். வருவாய், கனிமவளம், காவல்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சில அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதிகளவு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசுக்கு மாற்றப்படுகிறது என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X