பொது செய்தி

தமிழ்நாடு

திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:வீட்டிலிருந்த, 8 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாயை திருடிய மூவரிடம் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயை மற்றொரு வாலிபர் திருடினார். அதனை ஜாலியாக ஊரை சுற்றியும், மூன்று வேளையும் பிரியாணியாக சாப்பிட்டு, ஊர் சுற்றிய வாலிபரை போலீசிடம் மாட்டி கொண்டனர்.திருப்பூர், கோல்டன் நகர் அருகேயுள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மாயாண்டி, 47. பனியன் துணி 'வேஸ்ட்' குடோன் நடத்தி வருகிறார். கடந்த

திருப்பூர்:வீட்டிலிருந்த, 8 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாயை திருடிய மூவரிடம் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயை மற்றொரு வாலிபர் திருடினார். அதனை ஜாலியாக ஊரை சுற்றியும், மூன்று வேளையும் பிரியாணியாக சாப்பிட்டு, ஊர் சுற்றிய வாலிபரை போலீசிடம் மாட்டி கொண்டனர்.திருப்பூர், கோல்டன் நகர் அருகேயுள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மாயாண்டி, 47. பனியன் துணி 'வேஸ்ட்' குடோன் நடத்தி வருகிறார். கடந்த மாதம், 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் குடோனுக்கு சென்றனர். மதியம் வீடு திரும்பிய போது பீரோவில் இருந்த, 8 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.வீட்டு கதவு பூட்டு உடைக்கப்படாமல் இருந்த நிலையில், உள்ளே இருந்த பணம் மாயமானது குழப்பத்தை ஏற்படுத்தியது. புகாரின் பேரில், வடக்கு போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக, அருகிலுள்ள ஜோதி நகரை சேர்ந்த அருண்குமார், 21, பவானி நகரை சேர்ந்த அபிஷேக், 21 மற்றும் சூர்யா, 21 ஆகிய மூன்று பேரை பிடித்தனர்.அவர்ளிடம் நடத்திய விசாரணையில், மூவரும் மாயாண்டியின் வீட்டுக்கு சென்று, பூட்டை உடைக்காமல், கதவின் தாழ்ப்பாளை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. பணத்தை, ஊத்துக்குளி ரோடு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் அருகே புதருக்குள் பதுக்கி வைத்தது தெரிந்தது.மூன்று பேரையும் கைது செய்த போலீசார், மூவரையும் அழைத்து கொண்டு, தண்டவாளத்துக்கு சென்று பார்த்த போது, மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. மீதமுள்ள பணம் மாயமானது தெரிந்தது. இதையறிந்த பணத்தை 'பிளான்' போட்டு திருடியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.போலீசாரின் தீவிர விசாரணையில், பதுக்கி வைத்திருந்த பணத்தை திருடி சென்ற திருப்பூர், போயம்பாளையம், மும்மூர்த்தி நகரை சேர்ந்த ரவீந்தர், 21 என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 2 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.சிக்கன் பிரியாணியும்சிக்கிய ரவீந்தரும்இதுகுறித்து போலீசார் கூறியதாவது:மூவரையும் 'கஸ்டடி' எடுத்து விசாரித்தோம். திருடிய பணத்தை, தண்டவாளம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்ததை, அவர்களின் நண்பர்கள் சிலருக்கு தெரிய வந்தது. ஆனால், யார் பணத்தை எடுத்தார்கள் என்பது குறித்து, கண்காணித்து வந்தோம்.மூன்று பேருடன் பழகி வந்த, ரவீந்தர் புதியதாக பைக் வாங்கி, பெங்களூர் உட்பட பல ஊர்களுக்கு சென்று வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை பிடித்து விசாரித்தோம். அதில், பெங்களூரில் தங்கி பெரிய ஓட்டல்களில் தங்கி, பெரும்பாலும் சிக்கன் பிரியாணியாக வாங்கி சாப்பிட்டுள்ளார்.அதன்பின், மத்தியப்பிரதேசம், புனே என, தொலைதுார பகுதிக்கு 'ஜாலியாக' ஊர் சுற்றி பணத்தை செலவழித்தது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X