கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கையிலிருந்து கைதியை தமிழக சிறைக்கு மாற்றத் தயார் உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதியை தமிழக சிறைக்கு மாற்ற இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் மெஹரு நிஷா தாக்கல் செய்த மனு: எனது கணவர் ரிபாயுதீன். மீனவரான இவரை போதைப் பொருள் வழக்கில் இலங்கை போலீசார் 2013 ல் கைது

மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதியை தமிழக சிறைக்கு மாற்ற இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் மெஹரு நிஷா தாக்கல் செய்த மனு: எனது கணவர் ரிபாயுதீன். மீனவரான இவரை போதைப் பொருள் வழக்கில் இலங்கை போலீசார் 2013 ல் கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளார். அவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை. எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது.

இந்தியா-இலங்கை இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. கணவரை இந்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மெஹருநிஷா குறிப்பிட்டார்.

நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு, 'மனுதாரரின் கணவரை தமிழக சிறைக்கு மாற்ற இலங்கையிலுள்ள இந்திய துாதரகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரை அழைத்துவர தமிழக போலீசார் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால், அதைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது,' என தெரிவித்தது.நீதிபதிகள், 'போலீசாரை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X