பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் வெளி நபர்கள் விற்பனையாளர் மீது நடவடிக்கை பதிவாளர் எச்சரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை:'ரேஷன் கடைகளில் வெளி நபர்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களை தவிர வெளி நபர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அதன் மூலம் முறைகேடுகள் நடப்பதாகவும் கார்டுதாரர்கள் சார்பில் புகார்கள்

மதுரை:'ரேஷன் கடைகளில் வெளி நபர்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களை தவிர வெளி நபர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அதன் மூலம் முறைகேடுகள் நடப்பதாகவும் கார்டுதாரர்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.இதன் எதிரொலியாக பதிவாளர் சண்முகம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

ரேஷன் கடை பணியாளர்கள் தவிர வெளி நபர்கள் யாரும் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் போலீஸ், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வர். வெளிநபர்களை கடையில் அனுமதித்து அவர்களுக்கு உடந்தையாக உள்ள விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.

மேலும் ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தால் அவர்களை உடன் அருகில் உள்ள வேறு கடைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.'ஆண்டுக்கு ஒருமுறை இடமாறுதல் அளித்த நிலையில் 3ஆண்டு வரை ஒரே கடையில் பணிபுரியலாம் என்ற பதிவாளரின் உத்தரவை வரவேற்பதாக' கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X